Latestமலேசியா

சுல்தான் இப்ராஹிம் பேரரசராக அரியணை அமரும் விழாவில் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு தவறுக்காக Meta மன்னிப்பு கோரியது

கோலாலம்பூர், ஜூலை 23 – மலேசியாவின் 17ஆவது பேரரசராக சுல்தான் இப்ராஹிம் அரியணை அமர்ந்தது தொடர்பான பதிவுகளில் தானியங்கி முறையில் நடந்த மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைக்காக Meta Platforms Inc ( Meta ) தளம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பான தொழிற்நுட்ப பிழையை தாம் தீர்த்துவிட்டதாக Meta தளத்தின் தென்கிழக்காசிய பொதுக் கொள்கை இயக்குனர் ராபேல் பிராங்கல்,( Rafael Frankel ) தெரிவித்தார். மலாய் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு தானியங்கி முறை மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழை குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மலேசிய அரச குடும்பத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மேலும் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட மலேசிய வானொலி தொலைக்காட்சியான ஆர்.டி.எம் , ஜோகூர் மன்றம் மற்றும் பிறருக்கு ஏற்பட்ட சங்கடத்திற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று Rafael Frankel தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழாவுடன் இணைந்து ‘RTM இன் இரங்கல் செய்தி உள்ளடக்கம்’ எனும் தவறுதலான மொழிப்பெயர்ப்புடன் பதிவு முகநூலில் இடம்பெற்றது. RTM இன் அந்த அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் தோன்றியிருப்பது Facebook-க்கின் சுய மொழிபெயர்ப்பு என்று மலேசிய ஒலிபரப்புத் துறையின் பொது உறவுப் பிரிவு தெரிவித்தது. இது தொடர்பாக ஆர்.டி.எம் போலீசில் புகார் செய்தோடு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC), மெட்டா அமைப்பின் தவறான மொழிபெயர்ப்பு குறித்து மெட்டாவை தொடர்பு கொண்டதாகவும் அது தெரிவித்தது. முகநூலில் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் ஆங்கிலத்தில் பதிவேற்றவில்லை என்று RTM தெளிவுபடுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!