
பெர்மாத்தாங் பாவ், அக்டோபர்-10,
பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஒரு சூட் கேஸில் அடைக்கப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிற்பகல் 1.43 மணியளவில் பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
சடலம் அடையாளம் தெரியாத ஆடவருடையதாகும்; அது கடுமையாக சேதமடைந்திருந்ததாக செபராங் பிறை உத்தாரா போலீஸ் கூறியது.
சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொலை விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அருகிலுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தகவல் இருந்தால் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.