Latest
செகாமாட்டில் லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீ விபத்தில் உயிரிழப்பு

செகாமாட், ஜனவரி-4,
ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த கோர விபத்தில், 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
ஜாலான் தெனாங் ஜெயா, பெக்கான் தெனாங்கில், லாரி மற்றும் Yamaha LC135 மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு வாகனங்களும் தீப்பற்றின.
லாரியின் கீழ் சிக்கிக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி தீயில் சிக்கி பெரும்பாலும் எரிந்த நிலையில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளும் அதன் ஓட்டுநரும் 90% எரிந்த நிலையில், லாரி 30% சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
லாரி ஓட்டுநரை சம்பவ இடத்தில் காணவில்லை.
லாபிஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த குழு, மாலை 7 மணிக்கு ஏற்பட்ட தீயை இரவு 9.14 மணிக்கு முழுமையாக அணைத்தது.
இறந்தவரின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



