
செகாமட், ஆகஸ்ட் 14 – கடந்த மாதம் கம்போங் புக்கிட் சிப்புட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டுமென்று நீதித்துறையை வலியுறுத்தி வருகின்றனர்.
72 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் வீட்டை உரிமம் பெறாத கடன் வழங்குபவர்கள் (ஆ லாங்க்) தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வயது முதிர்ந்த மாது தனது உடைமைகளை காப்பாற்ற முயன்றபோது, தீயில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும், தங்கள் அன்புக்குரியவரை இழந்து தவித்து வருவதாகவும் அறிவித்தனர்.
இன்று செகாமட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர் அச்சந்தேக நபர் குற்றத்தை நீதிபதியின் முன் மறுத்துள்ளான்.
ஐந்து வீடுகளைச் சூழ்ந்த இத்தீவிபத்தில் அந்த வயோதிக பெண் உயிரிழந்தார் என்றும் போலீஸ் தரப்பிற்கு கிடைக்கப்பெற்ற சிசிடிவி காணொளியில், குற்றவாளி வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காட்சிகள் பதிவாகியுள்ளன என்றும் அறியப்படுகின்றது.