
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-7-சிக்கு சந்திரா என்றழைக்கப்படும் சமூக ஆர்வலர் சந்திரசேகரனின் மனைவிக்குச் சொந்தமான மூன்று கார்களுக்குத் தீ வைத்ததாக மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எம். ஸ்ரீ உமா மகேஸ்வரியின் மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்து சேதம் விளைவித்ததாக டிரக் ஓட்டுநர் ஏ. குமரன், பாதுகாவலர் எஸ். கிஷன் மற்றும் லாரி ஓட்டுநர் பி. சுரேந்திரன் ஆகியோர் பெட்டாலிங் ஜெயா sessions நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மார்ச் 10 ஆம் தேதி பூச்சோங், Taman Kinraraவில் கார்களுக்கு ஏற்பட்ட சேதத்தால், உமா மகேஸ்வரிக்கு 80,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அம்மூவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 8,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
மேலும், வழக்கு முடியும் வரை தங்களது கடப்பிதழ்களை ஒப்படைக்குமாறும், சாட்சிகளிடம் தலையிட வேண்டாம் என்றும் அவர் உத்தரவிட்டார். அவ்வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



