Latestமலேசியா

செக்ஸ் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருந்த பெண் வியாபாரிக்கு இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம்

பாலேக் பூலாவ், மே-28 – வணிகத் தளத்தில் 102 செக்ஸ் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருந்ததை, பெண் வியாபாரி ஒருவர் பினாங்கு பாலேக் பூலாவ் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

29 வயது Sarah Phoon, Bayan Lepas, Persiaran Bayan Indah-வில் உள்ள பேரங்காடியில் பிப்ரவரி 6-ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 292-ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி, அப்பெண்ணுக்கு இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!