Latestமலேசியா

செனாவாங்கில் சொந்த மகளைக் கொன்ற வழக்கில் தனித்து வாழும் இந்தியத் தாய் விடுதலை

சிரம்பான், அக்டோபர்-11, நான்காண்டுகளுக்கு முன் தனது 6 வயது மகளை கொலைச் செய்த குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிருந்தும், தனித்து வாழும் இந்திய மாது விடுதலையாகியுள்ளார்.

வழக்கின் இறுதியில் 39 வயது A.மாரியம்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கத் தவறியது.

எனவே, தற்காப்பு வாதம் புரிய அழைக்காமலேயே சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்தது.

2020 செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை செனாவாங், Matahari Heights அடுக்குமாடி வீட்டில் அக்கொலையைப் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

நான்காண்டுகளாக நடைபெற்று வந்த அக்கொலை வழக்கில் மொத்தம் 13 சாட்சிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய மாரியம்மா, தாம் விடுதலையானது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.

வழக்கு முடிந்திருப்பதால் இனி மற்ற 2 பிள்ளைகளையும் பார்க்க ஆவலாக இருப்பதாவும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!