ஜோகூர் பாரு, ஜூலை 17 – 16 வயது யுவதி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, பாதுகாவலர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
எனினும், 59 வயது கலைசெல்வன் எனும் அவ்வாடவன், மரண தண்டனைக்கு பதிலாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
2011-ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி, கலைசெல்வன் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து, அவனது சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக, நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, 13 ஆண்டுகளுக்கு முன், 2011 ஜூன் 18-ஆம் தேதி, அதிகாலை மணி 2.30 வாக்கில், சுங்கை மாசாய் சென்பனை தோட்டத்தில், தனது நண்பரின் 16 வயது மகளான நூர் ரஹாயா ஙாமருடினை ( Nur Rahayu Qomarudin) கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.