
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கதம், வெண்கலத்திலான தொங்கும் விளக்கு உள்ளிட்டவை திருடுபோயின.
சனிக்கிழமை மாலை புகார் கிடைத்ததும் விசாரணையில் இறங்கிய போலீஸ், 32 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தது.
திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவத்தின் போது அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியான வேளை, ஏற்கனவே 13 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் அம்பலமானது.
விசாரணைக்காக மார்ச் 21 வரை அவ்வாடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செராஸ் போலீஸ் கூறியது.



