Latestமலேசியா

செலாயாங்கில், 6 மாதங்களாக கொடுமைகளுக்கு இலக்காகி வந்ததாக நம்பப்படும் இந்தோனேசிய பணிப்பெண் மீட்பு ; பெண் கணக்காய்வாளர் கைது

செலாயாங், ஜூன் 28 – கடந்த ஆறு மாதங்களாக, சம்பளம் எதுவும் கொடுக்காமல், தனது முதலாளியால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படும், 24 வயது இந்தோனேசியப் பணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர், செலாயாங்கிலுள்ள, வீடொன்றில், நேற்று மாலை மணி 6.15 வாக்கில், போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அப்பெண் மீட்கப்பட்டதாக, புக்கிட் அமான் D3 ஆட்கடத்தல் குற்றப்புலனாய்வுத் பிரிவின் துணை தலைமை இயக்குனர் சீனியர் அசிஸ்டன் கமிஸ்னர் சோபியான் சந்தோங் (Soffian Santong) தெரிவித்தார்.

அவ்வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக சம்பந்தப்பட்ட பெண் வேலை செய்து வருவதும், அவருக்கு இதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கப்பட்டதில்லை என்பதும் தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதோடு, அப்பெண் பிரம்பால் தாக்கப்பட்டதும், பலமுறை அறைந்து கொடுமைப்படுத்தப்பட்டதும், அவரது உடலில் இருக்கும் காயங்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டதாக சோபியான் சொன்னார்

அச்சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் முதலாளி என நம்பப்படும் 39 வயது உள்நாட்டு பெண் கணக்காய்வாளர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!