Latestஉலகம்

ஜப்பானில்,12 வயது ‘ஆண்’ நீர்யானை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பெண் என கண்டறியப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – ஜப்பானின் ஒசாகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் ஆண் நீர்யானை உண்மையில் ஒரு பெண் என்று கண்டறியப்பட்டுள்ளது. Gen Chan எனப்படும் நீர்யானை வழக்கமான ஆண் நீர்யானை நடத்தையை காட்டவில்லை என்பதை மிருகக்காட்சி சாலையினர் கவனித்ததை அடுத்து, மிருகக்காட்சிசாலை DNA சோதனையை நடத்தியதாக ஒசாகா Tennoji மிருகக்காட்சிசாலையின் இணையதளம் தெரிவித்திருக்கிறது .

12 வயதான Gen Chan என்ற அந்த நீர்யானை 2017 ஆம் ஆண்டு மெக்சிகோவிலிருந்து ஒசாகாவிற்கு ஐந்து வயதாக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சுங்க ஆவணங்கள் அதனை ஒரு ஆண் என்று அறிவித்தன. Gen Chan ன் முதன்முதலில் மெக்சிகோவில் உள்ள ஆப்பிரிக்க Safari விலங்குகள் பூங்காவில் இருந்து தனது ஐந்து வயதில் உயிரியல் பூங்காவிற்கு வந்ததாகவும், அதன் இனப்பெருக்க உறுப்பை பார்வைக்கு உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் காரணமாக நீர்யானையின் பெயரை மாற்ற வேண்டாம் என்றும் உயிரியல் பூங்கா முடிவு செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!