Latestஉலகம்மலேசியா

ஜப்பானுக்கு பிரதமர் அன்வார் 3 நாள் அதிகாரப்பூர்வ பயணம்

தோக்யோ, மே 23 – ஆசியாவின் எதிர்காலம் மீதான 29ஆவது அனைத்துலக மாநாடு மற்றும் ஜப்பானிய பிரதமர் Fumio Kishida வுடன் இருவழி பேச்சு நடத்தும் பொருட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் TOKYO சென்றடைந்தார் . வெளியுறவு அமைச்சர் Mohamad Hassan, முதலீடு, வாணிக தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul Aziz , மனிதவள அமைச்சர் Steven Sim Chee Keong ஆகியோரும் அன்வாருடன் ஜப்பான் சென்றுள்ளனர்.

ஜப்பானில் தங்கியிருக்கும் வேளையில் அந்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள், மலேசிய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களையும் அன்வார் சந்திப்பார். தொடர்ந்து 9ஆண்டுகளாக மலேசியாவின் பெரிய வர்த்தக பங்காளியாக ஜப்பான் இருந்துவருகிறது. கடந்த ஆண்டு இவ்விரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் 156.64 பில்லியன் ரிங்கிட் அல்லது 34.39 பில்லியன் அமெரிக்கா டாலராக பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!