
தோக்யோ, ஏப்ரல்-20,
ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன்று ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-ஙாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் கடற்கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் கடலுக்கடியில் ஆழமான பகுதியில் மையமிட்ட சில நிமிடங்களிலேயே கடலோரப் பகுதிகளில் கடல் மட்டம் உயரத் தொடங்கியது.
இதனால், 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை இராட்சத அலைகள் எழக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் தோக்யோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டடங்கள் கடுமையாகக் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீதிக்கு வந்தனர்.
இரயில் மற்றும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
என்றாலும், மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.



