Latestசிங்கப்பூர்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை காலமானார்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை சண்முகரத்னம் தமது 99 ஆவது வயதில் காலமானார்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அவர் மறைந்ததாக அதிபரின் அலுவலகம் இன்று உறுதிப்படுத்தியது.

அவரது நல்லுடல் தனிப்பட்ட சடங்கில் பாரம்பரிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

அவரது பெற்றோர் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர் . சர்வாம்பிகை சிங்கப்பூரின் முன்னணி உடற்கூறு நிபுணரான நிறைநிலை பேராசிரியர் கனகரத்னம் சண்முகரத்னத்தை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர் 2018 ஆம்ஆண்டு தனது 97 ஆவது வயதில் காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!