ஜாசின், ஆகஸ்ட் -26 – மலாக்கா, ஜாசினில் பாராங்கத்தி ஏந்திய முகமூடி கும்பலால் ஓர் ஆடவர் பயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
Rim அருகே முடி திருத்தும் கடையொன்றின் முன்புறம் இரவு 9 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சிகிச்சைக்காக ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லபட்டவரை, அக்கும்பல் விடாது விரட்டிச் சென்றதால் அப்பகுதியே பரபரப்பானது.
காயமடைந்த அண்ணனை அவசர சிகிச்சைப் பிரிவில் இறக்கி விட்டு திரும்பும் போது, தம்பியையும் அக்கும்பல் மடக்கி கார் கண்ணாடியை உடைத்தது.
அக்கும்பலிடமிருந்து தப்பிக்கும் அவசரத்தில், அந்நபர் அம்புலன்ஸ் வண்டியை மோதி விட்டார்.
பிறகெப்படியோ ஜாசின் போலீஸ் தலைமையகம் வரை காரை அழுத்திச் சென்று நடந்தவை குறித்து புகாரளித்தார்.
இதையடுத்து 21, 22, 31 வயதிலான மூன்று ஆடவர்களை ஜாசின் போலீஸ் கைதுச் செய்தது.
மேலும் சில சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்.
வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆடவர், இரவு 10.15 மணியளவில் உயிரிழந்தார்.