
கோலாலம்பூர், ஜூலை 21- இன்று அதிகாலை, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்தவுடனேயே 14 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர் என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில், சுமார் 6க்கு 6 மீட்டர் பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் உள்ள பகுதி முழுமையாக எரிந்து நாசமானது.
தீயிக்கு இரையான அந்த 50 வயதுடைய ஆடவர் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அறிவித்துள்ளனர்.