Latestமலேசியா

ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிமில் லோரியிலிருந்து கழன்ற டயர் காரை தாக்கியதில் ஓட்டுனர் கடுமையாக காயம்

கோலாலம்பூர், மே 23 – கோலாலம்பூர், Jalan Tuanku Abdul Halimமில் லோரியிலிருந்து கழன்ற டயர் ஒரு காரில் மோதியதைத் தொடர்ந்து அக்கார் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் கடுமையான காயத்திற்கு உள்ளானார். 31 வயதுடைய அந்த ஆடவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு கார் ஓட்டுனர் காயம் அடையவில்லை. அந்த லோரியில் இருந்து கழன்ற இரண்டு டயர்கள் சாலையின் எதிப்புற பகுதியில் விழுந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் அமலாக்க மற்றும் விசாரணை துறையின் துணைத் தலைவர் Supt Suffian Abdullah தெரிவித்தார்.

லோரி ஓட்டுனர் Rawangகிலிருந்து Sungai Besiயை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதன் இரண்டு டயர்கள் கழன்று ஓடி Proton Iriz மற்றும் Proton Saga காரில் மோதியது.

அப்போது Jalan Mahameruவிலிருந்து Jalan Dutaவை நோக்கி சென்று கொண்டிருந்த Proton Iriz ஓட்டுர் அந்த டயரை தவிர்க்க முடியாமல் அதில் மோதியபின் அவரது கார் சாலையில் கவிழ்ந்தது.

அந்த சம்பவத்தில்  Proton Saga கார் ஓட்டுனர் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் குறித்த காணொளி TikTok  சமூக வலைத்தளத்தில் வைரலானது . லோரியின் டயர் தாக்கியதால் அந்த காரின் கூரைப்பகுதி நொறுங்கியதோடு அதன் கண்ணாடியும் உடைந்ததை ஒரு நிமிடம் 9 வினாடியைக் கொண்ட அந்த காணொளியில் காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!