கோலாலம்பூர், மே 23 – வழிபாட்டு தளங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்க மான்யங்களுக்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் மனுச் செய்யும்படி முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைசின் மூலம் இணையம் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களை செய்ய முடியும் என தொடர்பு துணையமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். தங்களது வழிபாட்டு தளங்கள் மேம்படுத்துவதற்கு நிதி தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
நமது நாட்டில் அனைத்து சமயங்களுக்கும் ஆதரவு அளிக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை இது காட்டுவதாக Teo Nie ching தெரிவித்தார். நேற்று கோலாலம்பூரில் விசாக தின நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார். கடந்த ஆண்டு மேம்படுத்தும் பணிக்காக 300க்கும் மேற்பட்ட தேவாலங்கள் மற்றும் ஆலயங்கள் அரசாங்கத்தின் மான்யங்களாக 50 மில்லியன் ரிங்கிட்டை பெற்றதாக அவர் கூறினார்.