
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா தேவி சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் ஜூன் ஏழாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் Tuas மற்றும் Forest Cityக்கு அருகில், சொந்த நிலத்தில் அமையப்பெற்றுள்ள இத்திருத்தலத்தில், பெண் தெய்வங்களை முதன்மையாகக் கொண்டு மொத்தம் 54 தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தின் நிறுவனரும் சிவில் இன்ஜினியருமான ஸ்ரீ வித்யானந்த சர்மா சுவாமி என்ற வினோத், கடந்த 7 ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார்.
இத்திருக்கோவிலின் மூலஸ்தானத் தெய்வமான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் 7.2 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.
தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக 12 அடி ஆதிசக்தி பார்வதி கால பைரவி தேவி மற்றும் அஷ்ட கால பைரவர்கள் இங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.
மேலும், 21 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ Dakshana காளி தேவியின் விஸ்வரூபத் தோற்றம் பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
கும்பாபிஷேக தலைவி திருமதி டச்சு மற்றும் துணை தலைவி திருமதி Batmaneswary தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்புனித மகா கும்பாபிஷேக விழாவில் திரளாகக் கலந்துகொண்டு, அன்னை காமாக்ஷி அம்பாளின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு பொது மக்கள் அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
இவ்வேளையில், 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகளுக்கு இப்போதே நீங்கள் முன்பதிவுச் செய்தால், சிறப்பு தரிசனம் உண்டு என்கிறார், தச்சு..
கட்டணமும் மலிவானதே எனக் குறிப்பிட்ட அவர், கும்ப நீர் மேனி மேல் பட்டு, தேவி சக்தியின் அருளால் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றார்.
எனவே, வரம் வேண்டுபவர்கள், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல், மேல் விபரங்களுக்கு திரையில் காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.



