Latestமலேசியா

ஜூலை 6 ஆம் தேதி பினாங்கு சுங்கை பாக்காப் இடைத் தேர்தல்; ஜூன் 22இல் வேட்பு மனுத் தாக்கல்

புத்ரா ஜெயா, ஜூன் 6 – பினாங்கு மாநிலத்தில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் ஜூலை 6ஆம் தேதியும் அதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 22 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணைய துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் ( Azmi Sharom ) தெரிவித்திருக்கிறார்.

சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை நடத்துவதற்கு RM2.1 million ரிங்கிட் தேவைப்படுவதாக இன்று Menara SPR ரில் தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத்தை தலைமையேற்று நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அஸ்மி ஷாரோம் கூறினார். இந்த தொகுதிக்கான உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைத்து பிரிவுக்கான அஞ்சல் வாக்குகளுக்கான மனுக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. தேர்தல் நிர்வாகி ஒருவரையும் அவருக்கு உதவியாக மூன்று உதவி நிர்வாக அதிகாரிகளையும் இடைத் தேர்தல் பணிக்காக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்த இடைத் தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைக்கைகளை கண்காணிப்பதற்காக இரண்டு அமலாக்க குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது முதல் ஏப்ரல்வரையிலான மே மாதம் 24 ஆம்தேதி சரிபார்க்கப்பட்ட கூடுதல் வாக்காளர் பட்டியல் சுங்கை பாக்காப் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 39,279 தகுதி பெற்ற வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 57 போலீஸ்காரர்களும் இடம் பெற்றுள்ளதாக அஷ்மி ஷாரோம் தெரிவித்தார். Taman Desa Jawi , Jalan Serinditடிலுள்ள Jawi பலநோக்கு மண்டபம் வேட்பு மனுத்தாக்கலுக்காகவும் வாக்குகள் எண்ணப்படும் மையமாகவும் பயன்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!