குவாலா லங்காட், ஆகஸ்ட் 21 – குவாலா லங்காட், ஜெஞ்சாரோமில் உள்ள செம்பனை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆடவர் ஒருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, நேற்று செம்பனை நார் குவியலில் எலும்புகளாகக் கண்டெடுக்கப்பட்டார்.
எட்டு நாட்களாக பணிபுரிந்த வந்த அந்த 34 வயது ஆடவர் மதிய நேர ஓய்விற்குப் பிறகு மாயமாகியுள்ளார்.
இதனிடையே, தொழிற்சாலையின் மேலாளர், சக ஊழியர்களுடன் சேர்ந்து காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கின்றார்.
அப்போது, செம்பனை நார்களின் குவியலில் காலணிகள், ஆடைகளின் துண்டுகள் மற்றும் மனித எலும்பு துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காணாமல் போனவர் செம்பனை பழக் கொத்து அரைக்கும் இயந்திரத்தில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகக் கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மட் ரித்வான் முகமட் நோர் (Ahmad Ridhwan Mohd Nor) தெரிவித்தார்.