ஜெம்போல் , ஏப் 11 – Jempol , Jalan Pahang -Kemayan சாலையில் போலீஸ் தடுப்பு சோதனையின்போது நிற்காமல் சென்ற லோரி ஓட்டுனரை 50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர். 21 வயது சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற லோரியின் டயர்களில் 10 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்த நபர் கட்டாயமாக லோரியை நிறுத்தினான். அதற்கு முன்னதாக அந்த சந்தேகப் பேர்வழி இரட்டைக் கோடு பகுதியில் லோரியை திரும்பியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
அந்த லோரி ஓட்டுனர் தொடர்ந்து கவனக் குறைவாக லோரியை ஓட்டிச் சென்றதோடு போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளையும் மோத முயன்றதாக Jempol மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Hoo Chang Hook தெரிவித்தார். கிட்டத்தட்ட சாலையை பயன்படுத்தும் இதர நபர்களையும் அந்த லோரி ஓட்டுனர் மோத முயன்றதாகவும் அந்த லோரியின் டயரை சுட்டதன் மூலம் அந்நபர் கட்டாயமாக அந்த லோரியை நிறுத்திய பின்னர் கைது செய்யப்பட்டான் என Hoo Chang Hook வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.