ஜெராண்டூட் , ஜூன் 18 – ஜெராண்டுட் , பண்டார் இன்டெராபுராவில் வீசிய புயலைத் தொடர்ந்து தியாக திருநாளுக்காக அங்கு போடப்பட்டிருந்த வர்த்தக கூடாரங்கள் பறந்தன. அந்நகரில் போடப்பட்டிருந்த அங்காடிக் கடைகளும் சேதம் அடைந்தன. நேற்று மாலை மணி ஆறு அளவில் வீசிய புயலின்போது ஒரு ஹோட்டலுக்கு முன் போடப்பட்டிருந்த பல காலி கூடாரங்களும் பறந்தன. Bandar Indderapura விலுள்ள பேராங்காடிக்கு சென்றபோது அங்கு புயல் வீசியதாக குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். அப்போது இரண்டு கூடாரங்கள் பறந்தன. காரை நிறுத்திவிட்டு பார்த்தபோது மேலும் பல கூரைகள் விழுந்து சேதம் அடைந்தன. அங்குள்ள பேராங்காடியிலிருந்து மக்கள் புயல் புயல் என கூச்சலிட்டுக்கொண்டே தங்களது கார்களுக்கு ஓடியதாக மோட்டார் சைக்கிளோட்டியான இஷாம் அப்துல் கனி
( Izam Abdul Ghani ) கூறினார்.