ஜெராந்தூட், ஜூலை-7 – பஹாங், ஜெராந்தூட்டில் பிரேக் பிடிக்கத் தவறிய லாரி 2 வாகனங்களையும் கடைத்தொகுதியையும் மோதியதில் ஒருவர் பலியானார், மற்றொருவர் காயமுற்றார்.
Jalan Besar Bandar Lama-வில் சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
லாரி கட்டுப்பாட்டை இழந்ததால், முச்சந்தியில் அது நிற்காமல் முதன்மை சாலையில் போய்க் கொண்டிருந்த வேனை மோதி, எதிர்புற சாலையில் நின்றிருந்த இன்னொரு காரையும் மோதித் தள்ளியது.
கடைசியில் அங்கிருந்த கடையில் மோதி நின்றதில், லாரியின்னுள்ளேயே சிக்கி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார்.
அவரின் உடலைத் தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.
லாரியால் மோதப்பட்டு கவிழ்ந்த வேனின் ஓட்டுநர் காயங்களுடன் ஜெராந்தூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலியான லாரி ஓட்டுநர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
லாரி கடைசியாக மோதி நின்ற கடை வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.