ஜொகூர் பாரு, மே-17, ஜொகூர் பாருவில் தனது கார் அதுவாகவே பின்னால் riverse ஆகி தன்னை மோதியதில், மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துயரச் சம்பவம்
Taman Amar, Jalan Cekor Manis-சில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்தது.
வெளியே காரை நிறுத்தி விட்டு, வீட்டுக் கதவை திறந்துக் கொண்டிருந்த போது அக்கார் தன்னாலேயே riverse ஆகி 67 வயது அம்மூதாட்டியை மோதியது.
அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் உடல் காருக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட நிலையில் மீட்கப்பட்டது.
அம்மூதாட்டியின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெப்ராவ் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.