கூலாய், ஏப்ரல் 3 – ஜோகூர், கூலாயிக்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுற்றுலா பேருந்தும், லோரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பத்து பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை மணி 6.15 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டதால், காலில் பலத்த காயங்களுக்கு இலக்கான சுற்றுலா பேருந்து ஓட்டுனர், தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டார்.
பேருந்தில் பயணித்த எட்டு பயணிகளும், 72 வயது லோரி ஓட்டுனரும் சிராப்பு காயங்களுக்கு இலக்காகினர்.
ஜோகூர் பாருவிலிருந்து வடக்கை நோக்கி பயணமான பேருந்தும், லோரியும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த நால்வர் கூலாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.