Latestமலேசியா

ஜோகூரில் லாரியை மோதிய SUV வாகனம்; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஓட்டுநர்

சிகாமட், மே 23 – லாரியை மோதிய 37 வயது SUV வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று, சிகாமாட் பத்து 16, ஜாலான் மூவார்-ஜெமெந்தாவில் (alan Muar-Jementah) நிகழ்ந்துள்ளது.

தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது ஹாசிம் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் பலியான SUV வாகன ஓட்டுநர் உடலை மீட்பதற்கு சில சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் , உயிரிழந்தவருடன் பயணித்த 36 வயது பெண், காயங்களோடு உயிர் தப்பினார்.

விபத்தில் பலியானவரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!