Latestமலேசியா

ஜோகூரில் 7 வீடுகளை உடைத்து கொள்ளை; நால்வர் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 26 – ஜோகூரில் Pontian மற்றும் ஸ்ரீ அலாமில் (Seri Alam) ஏழு வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் உள்நாட்டை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். ஜோகூர் பாருவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 41 மற்றும் 55 வயதுக்கிடையிலான அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக கூலாய் ஓ.சி.பி.டி Superintendent டான் செங் லீ ( Tan Seng Lee ) தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் இதற்கு முன் குற்றச்செயலில் ஈடுபட்ட பின்னணியைக் கொண்டிருந்ததோடு போதைப் பொருளையும் பயன்படுத்தியிருப்பது தெரிவந்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் 457 ஆவது விதியின்படி வீடுகளை உடைத்து அத்துமீறி உள்ளே புகுந்து கொள்ளையிட்டது தொடர்பில் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 12 ஆம் தேதி இரவு மணி 9.20 க்கும் 11. 20 மணிக்குகிடையே அந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக டான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 34 வயது பெண் ஒருவர் ஜூலை 10 ஆம்தேதி தனது வீடு உடைக்கப்பட்டதோடு வீட்டிலிருந்த அனைத்து நகைகளும் காணவில்லையென புகார் செய்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கை தொலைபேசிகள், மடி கணினி, கையடக்க கணினி , வீடுகளை உடைக்கும் கருவிகள், இரண்டு கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கார்களில் ஒன்று பந்தாய் ரெமிஸில் (Pantai Remis) காணாமல்போனதாக புகார் செய்யப்பட்டவையாகும். மேலும் கொள்ளையின்போது அவர்கள் பயன்படுத்திய காரின் எண் பட்டை போலியானது என்பதும் தெரியவந்ததாக டான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!