கோத்தா திங்கி, ஜூன் 27 – IS பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பொருட்களை வைத்திருந்த தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு எதிரான, ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், 46 வயது சுஹைனி சர்வான் எனும் அப்பெண்ணிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
மே மாதம் 30-ஆம் தேதி, நண்பகல் மணி 2.20 வாக்கில், ஜாலான் பைடுரி, தாமான் டைமான் ஜெயா எனுமிடத்தில் அவர் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட பெண்ணை உத்தரவாததின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கவில்லை.
இவ்வழக்கு விசாரணை ஜூலை 29-ஆம் தேதி, உயர் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும்.
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை, IS தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்ததாக, ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், அப்பெண் மற்றும் அவரது கணவருக்கு எதிராக தனித்தனியே ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.