
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் பாரு, பிப்ரவரி-7,
ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு
கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் பாசீர் கூடாங் படகு முனையத்தில் ஓர் இந்தோனேசியரின் ஆவணங்களை சரிவர பரிசோதிக்காமல் இருக்க
லஞ்சம் பெற்றதாக இருவர் மீதும் ஜனவரி 21-ஆம் தேதி குற்றம் சாட்டப்படவிருந்தது.
ஆனால் இருவருமே மருத்துவ விடுப்பில் இருப்பதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததால் தேதி பிப்ரவரி 5-க்கு மாற்றப்பட்டது.
அப்போதும் நீதியன்றத்திற்கு வரத் தவறியதால் ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இந்த கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இதை உறுதிப்படுத்தியுள்ளது.



