
கோத்தா திங்கி, ஜனவரி-19, ஜோகூர், கோத்தா திங்கி, டெசாரு கடற்கரையில், வெள்ளை நிற அரை கால்சட்டை மட்டுமே அணிந்திருந்த அடையாளம் தெரியாத நடுத்தர வயது ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற தோல் கொண்ட அவ்வாடவர் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாமென, கோத்தா திங்கி போலீஸ் தலைவர் யூசோஃப் ஓத்மான் (Yusof Othman) தெரிவித்தார்.
சவப்பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறப்திருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டதாக யூசோஃப் சொன்னார்.