Latestமலேசியா

ஜோகூர் பாருவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; சிராலன் சுப்ரமணியம் உயிரிழப்பு

ஜோகூர், ஆகஸ்ட் 6 – ஜோகூர் பாரு, ஜாலான் கோத்தா திங்கி (Jalan Kota Tinggi)– புத்ரி வங்சா ()Puteri Wangsa) சாலையில் நிசான் நவாரா (Nissan Navara) மற்றும் பிரோடுவா மைவி (Perodua Myvi) வாகனங்கள் மோதிய விபத்தில் சிராலன் சுப்ரமணியம் என்பவர் உயிரிழந்தார்.

நிசான் நவாரா வாகனம், மைவி வாகனத்தை மோதியதில், அவ்வாகனத்தின் ஓட்டுநரான சிராலன் உள்பகுதியில் சிக்கிக் கொண்டார்.

நள்ளிரவு 1.22 மணிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மாட்டிக் கொண்டவரை அகற்ற முயன்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, நிசான் நவரா (Nissan Navara) வாகனத்தை ஓட்டிய 50 வயதான சிராலன் அச்சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்தார் என ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.

இதனிடையே சம்பவத்தில் விபத்துக்குள்ளன மைவி வாகன ஓட்டுநருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேலதிக நடவடிக்கைக்காகச் அவரின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!