ஜோகூர் பாரு, மே 28 – ஜோகூர் பாருவில் , டத்தோ Yunus Sulaiman னிலுள்ள தொழில்மயப் பகுதியிலுள்ள Paint அல்லது சாயம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை மணி 6. 37 க்கு அத்தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தைதை தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர். தீயினால் ஏற்பட்ட கரும்புகை 500 மீட்டர் தொலைவில் பார்க்க முடிந்தது. தேவையற்ற அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு அந்த தொழிற்சாலைக்கு அருகே குடியிருக்கும் மக்களும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு தீயணைப்பு அதிகாரிகளின் ஆலோசனையை கேட்பதற்கு தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
Check Also
Close