ஜோகூர் பாரு, ஏப் 29 – ஜோகூர் பாரு நகரில் போலி முதலீடு திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது இளம் பெண் உட்பட 19 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் அழைப்பு மைய ஏஜெண்டுகளாக செயல்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது அவர்களது மேலாளராக செயல்பட்ட 40 வயதுடைய ஆடவரும் கைது செய்யப்பட்டார். பாதுகாவலர்கள் வசதியுடன் கொண்ட வீடமைப்பு பகுதியில் இருந்த மூன்று வீடுகளில் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் எம்.குமார் தெரிவித்தார்.
அந்த வீடுகள் Call centre ராக அல்லது வாடிக்கையாளர்களின் தொடர்பு மையமாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த மையத்தில் பணியாற்றிவந்த ஒவ்வொரு முகவரும் சம்பளமாக 2,500 ரிங்கிட்டும் அதன் மேலாளர் 7,000 ரிங்கிட்டும் பெற்று வந்ததனர். அந்த சந்தேகத்திற்குரிய முகவர்களில் உள்நாட்டைச் சேர்ந்த 8 ஆடவர்களும் நான்கு வெளிநாட்டு ஆடவர்களும், உள்நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்களும் அடங்குவர் என் அவர் கூறினார்.