ஜோகூர் பாரு, மே 16 – ஜோகூர் பாரு Pandan Comercial centreரில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். ஜோகூர் குடிநுழைவுத்துறை, ஜோகூர் பாரு தென் மாவட்ட போலீஸ் தலைமையகம், ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மற்றும் உள்நாட்டு வாணிகம் மற்றும் செலவின அமைச்சின் ஜோகூர் கிளையின் அதிகாரிகளும் கூட்டாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சந்தேக நபர்கள் காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இடைக்கால இயக்குநர் Mohd Faizal Shamsudin தெரிவித்தார்.
வணிக மையத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரின் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். வெளிநாட்டினர் வேலை பெர்மிட் இன்றி வேலை செய்வது , பயண ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் அதிக காலம் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டதாக Mohd Faizal கூறினார். இந்த நடவடிக்கையின் போது உள்நாட்டினர், வெளிநாட்டினர் என 98 பேரிடம் நடத்தப்பட்டது. அவர்களில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.