ஜோகூர் பாரு- சிங்கப்பூர் நுழைவாயிலில் QR குறியீடுகளை அமல்படுத்துவது இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
ஜோகூர் பாரு, ஜூன் 3 – சுல்தான் இஸ்கந்தர் (Sultan Iskandar – BSI )) கட்டிடத்திற்கு அருகில் ஜோகூர் பாரு – சிங்கப்பூர் நுழைவாயிலில் QR குறியீடுகளை அமல்படுத்துவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதலில் அந்த திட்டம் நேற்று தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்திலுள்ள QR குறியீடு தற்போது ‘MyRentasஐப்’ பயன்படுத்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பணியில் இருப்பதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பஸ்லி முகமட் சாலே ( Mohamad Fazli Mohamad Salleh ) தெரிவித்திருக்கிறார்.
தற்போது, KSAB எனப்படும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது நுழைவு மையமான சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் மட்டுமே குடிநுழைவுத்துறை சோதனைக்கு QR குறியீடுகள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அங்கு பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் மலேசிய குடிமக்கள் ‘MySejahtera’ பயன்பாட்டில் காணப்படும் ‘MyTrip’ பை பதிவைச் செய்கிறார்கள்.
சோதனை அடைப்படையிலான காலக்கட்டத்தில் அங்கு QR குறியீடு செயல்பாடு சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்தவொரு தொழிற்நுட்ப பிரச்னை இல்லையென முகமட் பஸ்லி விவரித்தார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான பயணிகள்
QR குறியீடு பயன்பாட்டிற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யலாம் என்று முகமட் பஸ்லி வலியுறுத்தினார்.