Latestமலேசியா

ஜோகூர் பாரு ரயில் தண்டவாளத்தில் தலையில்லாத ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-14 – ஜோகூர் பாரு, கம்போங் மஜிடீ, ஜாலான் சுக்காரியாவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆடவருடையது என நம்பப்படும் தலையில்லா முண்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முழுமையற்ற அச்சடலத்தை செவ்வாய்க்கிழமை காலை பொது மக்கள் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது மோதப்பட்டு அந்நபர் உயிரிழந்திருக்கலாமென, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ACP ரவூப் செலாமாட் (Raub Selamat) கூறினார்.

30-திலிருந்து 40 வயது வயதிலானவர் என நம்பப்படும் அந்நபர் மாநிறம் கொண்டவர் என்றும், முதுகில் சீன நாகத்தை பச்சைக் குத்தியிருப்பதாகவும் போலீஸ் அடையாளம் கூறியது.

சம்பவ இடத்தில் குற்றச்செயல் நடைபெற்றதற்கான தடயங்கள் எதுவும் போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!