Latestமலேசியா

ஜோகூர் மாநிலத்தின் தமிழாசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு

ஜோகூர், ஆகஸ்ட் 5 – கல்வியறிவு மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட இந்திய மாணவர்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழாசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்கை நுண்ணறிவு எனும் பயிலரங்கு ஜோகூரில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி, ஜோகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அப்பயிலரங்கில், 260 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இப்பட்டறையில் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை உயர்த்திக்கொள்வதற்கும், புத்தாக்கச் சிந்தனையை வளப்படுத்துவதற்குமான முறைகள் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘காக்கும் கரங்கள்’ இயக்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய இளங்கோ, டங்கா வட்டார நகராண்மைக் கழக உறுப்பினரும் பூலாய் தொகுதி ம.இ.கா தலைவருமான பன்னீர்செல்வம், சிங்கப்பூர் கல்வி அமைச்சைச் சேர்ந்த மோகன் சுப்பையா, மலேசியக் கல்வி அமைச்சின் தொழில்நுட்பத்துறை உதவி இயக்குநர் ஆனந்தன் தர்மன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!