Latestமலேசியா

டிக்கெட் விற்பனையில் புதியச் சாதனை; பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 88 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

பாரீஸ், ஜூலை-22, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு எப்போதுமில்லாத அளவுக்கு இதுவரை 88 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இதுவொரு புதியச் சாதனையென, IOC எனப்படும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் விளையாட்டு இயக்குனர் கிட் மெக்கோனல் (Kit McConnel) தெரிவித்தார்.

இதற்கு முந்தையச் சாதனை, 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிக்காக விற்கப்பட்ட 83 லட்சம் டிக்கெட்டுகளாகும்.

பாரீஸ் நகரில் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு இவ்வளவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதும் இதுவே முதன் முறையென மெக்கோனல் சொன்னார்.

உலகின் அந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதை உறுதிச் செய்ய, 30,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

2024 கோடை கால ஒலிம்பிப் போட்டி வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர் 8 வரை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!