Latestமலேசியா

பேரா தெங்கா மாவட்டத்தில் நண்பரின் 14 வயது மகள் கற்பழிப்பு; இளைஞன் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, அக் 22 – நான்கு மாதங்களுக்கு முன் தனது நண்பரின் 14 வயது மகளை கற்பழித்தாக 26 வயது இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஒரு தொழிலாளியான வான் முகமட் ஷோபி வான் சுபியான் (Wan Muhamaad Sofie Wan Supian) அந்த குற்றச்சாட்டை மறுத்தான் . கடந்த ஜூலை 2 ஆம் தேதி காலை 10 மணியளவில் பேரா தெங்கா மாவட்டத்தில் கம்போங் சுங்கை தீமாவிலுள்ள ஒரு வீட்டில் முகமட் ஷோபி இக்குற்றத்தை புரிந்தாக நீதிபதி அஸியா அகமட் ( Azizah Ahmad) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான்.

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 376 ஆவது விதி
( உட்பிரிவு 1)இன் கீழ் Wan Muhamaad Sofie மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தனி நபர் உத்தரவாதத்தின் பேரில் அவனுக்கு 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அதோடு மாதத்திற்கு இரண்டு முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு இந்த வழக்கு முடியும்வரை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இதர சாட்சிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும் குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நவம்பர் 25 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!