Latestஉலகம்

டிரம்ப் படுகொலை முயற்சி ; அமெரிக்க இரகசிய சேவை இயக்குனர், தோல்வியை ஒப்புக் கொண்டார்

வாஷிங்டன், ஜூலை 23 – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை பாதுகாக்கும் பணியில், தனது நிறுவனம் தோல்வி அடைந்து விட்டதாக, அந்நாட்டின் இரகசிய சேவை இயக்குனர் கிம்பர்லி சீட் (Kimberley Cheatle) ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்த, மிகவும் சர்ச்சைக்குரிய காங்கிரஸ் விசாரணையின் போது,
சீட்டில் அவ்வாறு கூறியுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடத்தபட்ட தேர்தல் பரப்புரையின் போது, ஆடவன் ஒருவன் கூரை மீது ஏறி துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சம்பவம் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.

அதோடு, அச்சம்பவம் நிகழ்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும், விசாரணையின் போதும், கேள்விகளை தவிர்க்க முயன்றதோடு, பலமுறை “தெரியாது” என பதில் அளித்ததால், ஒட்டு மொத்த குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் சீற்றத்திற்கும் இலக்கானார் சீட்டில்.

அதனால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென, நெருக்கடிகள் தொடுக்கப்பட்டன.

எனினும், பதவி விலகலை நிராகரித்த சீட்டில், கடந்த பல ஆண்டுகளில், இரசிய சேவை சந்தித்துள்ள மிக மோசமான தோல்வி அதுவென குறிப்பிட்டதோடு, அதற்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும், அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாது எனவும் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால், இரகசிய சேவையை தொடர்ந்து வழிநடத்த தாம் தான் சரியான நபர் என்பதால், ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை எனவும் சீட்டில் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜூலை 13-ஆம் தேதி, பென்சில்வேனியாவில் டிரம்ப்புக்கு எதிராக படுகொலை முயற்சியை மேற்கொண்ட சந்தேக நபர் குறித்து, இரகசிய சேவைக்கு இரண்டு முதல் ஐந்து முறை தகவல் வழங்கப்பட்டதாக, விசாரணையின் போது சீட்டில் ஒப்புக் கொண்டார்.

இவ்வேளையில், அந்த வாக்குமூலத்தை அடுத்து, அதிபர் ஜோ பைடன் இன்னும் சீட்டல் மீது நம்பிக்கை வைத்துள்ளாரா என்பது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் கருத்துரைக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!