புதுடில்லி, ஏப் 11 – டில்லியில் Nangloi வட்டாரத்திள் குழந்தைகள் கடத்தல்காரர்களில் நால்வரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். 41 வயதுடைய Gurmeet Singh, அவரது மனைவியான 37 வயதுடைய Hasmeet Kaur, 30 வயதுடைய Mariyam மற்றும் 24 வயதுடைய Naina ஆகியோர் டில்லியில் வசித்த வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏழை குடும்பங்களிடமிருந்து குழந்தைகளை வாங்கும் அவர்கள் பின்னர் அதனை விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. டில்லியில் Sonia மருத்துவமனைக்கு அருகே ஏப்ரல் 2ஆம்தேதி Nagloi போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் குழுவொன்று பெண் குழந்தையை கையில் வைத்திருந்த பெண்மணி ஒருவர் உட்பட நால்வரை கைது செய்தது.
அவர்கள் அந்த குழந்தையை அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக டில்லி போலீஸ் துணை கமிஷனர் Jimmy Chiram தெரிவித்தார். 15 முதல் 20 நாட்கள் ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டடதாகவும் பஞ்சாப்பிலிருந்து இந்த குழந்தையை வாங்கிய கும்பல் அதனை விற்க முயன்றனர். அங்கு குழந்தையை வாங்குவதற்கு வாடிக்கையாளர் கிடைக்காததால் அதனை விற்பனை செய்வதற்கு டில்லிக்கு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் பிடிபட்டதாக Jimmy Chiram கூறினார்.