Latestமலேசியா

டுங்குனில் பயங்கர விபத்து: 4 வாகனங்கள் மோதல், 11 பேர் காயம்

டுங்குன், ஏப்ரல்-26-திரங்கானு, டுங்குன் அருகே 4 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்தது உட்பட மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

​Jalan Jerangau-Jabor சாலையின் 80-ஆவது கிலோ மீட்டரில், Felda Kerteh சாலைச் சந்திப்புக்கு அருகில் நேற்றிரவு இவ்விபத்து நிகழ்ந்தது.

​இதில் Proton Persona, Perodua Myvi, Honda Civicமற்றும் Toyota Hilux ஆகிய 4 வாகனங்கள் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன, சில பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

​தகவலறிந்து விரைந்து வந்த Paka தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக டுங்குன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

​காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​இந்த விபத்து குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!