பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 13 – ஜாலான் டூத்தா டோல் சாவடிக்கு அருகே கவிழ்ந்த டிரெய்லர் லோரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கோலாலம்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.
தீப்பிடித்து எரிந்த அந்த லோரி 50 சதவீதம் கருகிய நிலையில், அதன் ஓட்டுநர் கை, தலைப் பகுதிகளில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
30 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கவிழ்ந்த லோரியில் கசிந்த டீசலே, தீப்பிடித்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.