
டெங்கில் கோயில் நில விவகாரம்; ஆலயத் தலைவர் கைது, நில அத்துமீறல் குற்றச்சாட்டு
செப்பாங், பிப்ரவரி-9,
கடந்தாண்டு ஜூன் மாதம் சிலாங்கூர் டெங்கிலில் மற்றவர் நிலத்தில் அத்துமீறியதாக, கோயில் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
Dredging, Jalan Selangor எனுமிடத்தில் டத்தோ Suhaili Ahmad என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 49 வயது எம். பரமகுரு அத்துமீறியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஒரு பாதுகாவலருமான பரமகுரு, செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து, 4,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளை, மார்ச் 12-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் 3,00 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
அண்மையில், Taman Topaz-சில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஆலயத்தை காலி செய்யுமாறு ஆலய நிர்வாகத்திற்கு நில உரிமையாளர் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.



