
பட்னா, அக்டோபர்-8,
இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.
நெரிசல் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளதே அதற்குக் காரணம்.
சாலை பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் அதிக சுமை ஏற்றிய லாரிகள் பல பாதைகளை மறைத்ததால், நெரிசல் படுமோமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல வாகனமோட்டிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்; அவசர அம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருள் வாகனங்களும் நகர முடியாத நிலையில் உள்ளன.
பொறுமையிழந்து ஹார்ன் அடித்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் வேகம் மெதுவாகவே உள்ளது.
அதிகாரிகள் பொது மக்களை, அப்பாதையைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம், இந்தியாவில் அடிக்கடி நடக்கும் நெடுஞ்சாலை நெரிசல்களின் தீவிரத்தை மேலும் கோடிட்டு காட்டுகிறது.