Latestமலேசியா

தங்காக் மருத்துவமனையில் MC சான்றிதழ் களவு போனது; மருத்துவமனை நிர்வாகம் facebook-கில் அறிவிப்பு

தங்காக், மே-24 – ஜொகூர், தங்காங் மருத்துவமனையில் MC எனப்படும் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் காணாமல் போயிருக்கும் தகவல் வைரலாகியுள்ளது.

HTGK F 896400 என்ற தொடர் வரிசை எண்ணைக் (Serial number) கொண்ட அச்சான்றிதழ் காணாமல் போனதை, மருத்துவமனையே தனது Facebook பக்கத்தில் அறிவித்துள்ளது.

காணாமல் போன அந்த MC சான்றிதழ் செல்லாது எனவும் அது தெளிவுப்படுத்தியது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், MC-யைக் கூடவா திருடுவார்கள் என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.

அதே சமயம், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, மருத்துவமனை அதை பகிரங்கமாக அறிவித்து முன்னெச்சரிக்கைக் கொடுத்திருப்பதும் பாராட்டுக்குரியதே என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!