Latestமலேசியா
தஞ்சோங் பிடாரா கடற்கரையில் பாம்பு; பீதியடைந்த சுற்றுலா பயணிகள்
அலோர் காஜா, செப்டம்பர் 22 - நேற்று மதியம் மலாக்கா தஞ்சோங் பிடாரா கடலில் எட்டு கிலோ எடையுடன், இரண்டு மீட்டர் நீளமுடைய பாம்பு தோன்றியதால் கடற்கரையிலிருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் அருகில் பாம்பைக் கண்டதால் அதிர்ச்சியடைந்து உடனே மலேசிய குடிமை பாதுகாப்பு படைக்கு (APM) தகவல் தெரிவித்தனர். இரு அதிகாரிகள் சுமார் 30 நிமிட முயற்சிக்குப் பிறகு பாம்பை உடனடியாக பிடித்தனர் என்றும் இது போன்ற பாம்புகள் கடலில் தோன்றுவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறினர். பாம்பு அருகிலுள்ள ஆற்றங்கரைச் செடிகளிலிருந்து உணவுக்காக வெளியே வந்திருக்கலாம் என நம்பப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்.

அலோர் காஜா, செப்டம்பர் -22 ,
நேற்று மதியம் மலாக்கா தஞ்சோங் பிடாரா கடலில் எட்டு கிலோ எடையுடன், இரண்டு மீட்டர் நீளமுடைய பாம்பு தோன்றியதால் கடற்கரையிலிருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர்.
கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் அருகில் பாம்பைக் கண்டதால் அதிர்ச்சியடைந்து உடனே மலேசிய குடிமை பாதுகாப்பு படைக்கு (APM) தகவல் தெரிவித்தனர்.
இரு அதிகாரிகள் சுமார் 30 நிமிட முயற்சிக்குப் பிறகு பாம்பை உடனடியாக பிடித்தனர் என்றும் இது போன்ற பாம்புகள் கடலில் தோன்றுவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறினர்.
பாம்பு அருகிலுள்ள ஆற்றங்கரைச் செடிகளிலிருந்து உணவுக்காக வெளியே வந்திருக்கலாம் என நம்பப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்