Latestமலேசியா

தண்டவாளத்தில் மரம் விழுந்த சம்பவம்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய Monorel கேப்டனைப் பாராட்டிய போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர், மே-24 – இம்மாதத் தொடக்கத்தில் கனமழையின் போது தண்டவாளத்தில் மரம் சாய்ந்த சம்பவத்தில், விரைந்துச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய Monorel கேப்டன் மற்றும் பணியாளகளுக்கு போக்குவரத்து அமைச்சு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

அப்போது monorel-லில் இருந்த சுமார் 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியக் கேப்டன் Ahmad Zahiruddin Nordin-னின் செயல் சாதாரண விஷயம் அல்ல என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் புகழாரம் சூட்டினார்.

ஒரு பக்கம் கடும் மழை, இன்னொரு பக்கம் தண்டவாளத்தில் மரம் என இக்கட்டான சூழலில் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி அவர் செயல்பட்டுள்ளார் என, Zahiruddin-னைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய போது அந்தோனி லோக் சொன்னார்.

மே 7-ஆம் தேதி Jalan Sultan Ismail-லில் பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்ததில், அதன் கிளைகள் முறிந்து Monorel தண்டவாளத்தில் விழுந்தன.

இதனால் Bukit Nanas, Raja Chulan, Bukit Bintang, Imbi ஆகிய 4 Monorel நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

மரம் சாலையில் விழுந்ததில் 47 வயது காரோட்டி உயிரிழந்த வேளை, மேலும் இருவர் காயமுற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!