
மூவார், செப்டம்பர்-19,
ஜோகூர், மூவாரில் குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து, சொந்தத் தந்தையையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஆடவன், 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
புதன்கிழமை காலை கம்போங் தெங்கா, ஜாலான் பக்ரி பகுதியில், 32 வயது சந்தேக நபர் தனது 70 வயது தந்தையை கம்பும் கத்தியும் கொண்டு தாக்கினார்.
பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபர் போதைப்பொருள் எடுத்திருந்ததும், அவருக்கு மனநலம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்குதான் அவர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு காரும் எரிந்து சுமார் ஒன்றரை லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.